• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாஞ்ஜா நூல் தடையால் வியாபாரிகள் அவதி

July 13, 2017 தண்டோரா குழு

பட்டம் விட பயன்படுத்தப்படும் மாஞ்ஜா நூலை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது. இதனால் அதன் வியாபாரிகள் வேறு தொழிலை தேடி வருகின்றனர்.

ஹைதராபாத் நகரில் பட்டம் தயாரிப்பாளர்கள் அதை பறக்கவிட மாஞ்ஜா நூலை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அந்த நூலால் பலர் உயிரிழந்ததை அடுத்து, அதை பயன்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது. இதனால் வியாபாரத்தை இழந்தவர்கள் வேறு தொழிலை தேடிக்கொண்டு இருப்பதாக பட்டம் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுக் குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்,

“மாஞ்ஜா நூல் பயன்பாடிற்கு தடை, ஜி.எஸ்.டி, மற்றும் பணம் மதிப்பு நீக்கம் ஆகியவற்றால், என்னுடைய பட்டம் தயாரிக்கும் வியாபாரம் குறைய தொடங்கியது. என் குடும்பத்தை காப்பாற்ற தற்போது கரும்பு சாறு விற்கும் வியாபாரத்தை செய்து வருகிறேன்.

மூன்று தலைமுறைகளாக பருத்தி நூலை பயன்படுத்தி மாஞ்ஜா நூலை தயாரித்து வந்தோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் தாயாரிக்கப்படும் மஞ்சா நூல் இந்திய சந்தைக்கு வந்தது. அதன்பிறகு, வாடிக்கையாளர்களுக்கு பழைய வகை மாஞ்ஜா நூல்களை வாங்க விரும்பவில்லை. கடந்த டிசம்பர் மாதம், மாஞ்ஜா நூலை பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. கடையில் இருந்து மாஞ்ஜா நூல்களை போலீசார் கைப்பற்றினர்” என்று கூறினார்.

ஹைதராபாத் அருகிலுள்ள வியாபாரி கூறுகையில்,

“இந்த வியாபாரத்தை கடந்த 1௦௦ ஆண்டுகளாக செய்து வருகிறோம். போலீசார் எங்கள் கடையை சோதனையிட்டு, கடையிலிருந்த மாஞ்ஜா நூலை கைப்பற்றினர். தற்போது நான் வேறு கடையை நடத்தி வருகிறேன்.

சீனாவில் தாயாரிக்கப்படும் மாஞ்ஜா நூல் எத்தனை ஆபத்து ஆனது என்று எங்களுக்கு தெரியும். புதுதில்லி மற்றும் நொய்டா பகுதியில் அதை தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஏன் அரசு கைது செய்வதில்லை?” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க