• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழை வரும் போதெல்லாம் தீவு போல் மாறும் கோவை அரசு மருத்துவமனை

May 4, 2023 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் பொதுமக்கள் வந்த செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு முன்புறம் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதில் ஒரு நுழைவாயில் வழியாக ஆம்புலன்ஸ் உள்ளே சென்று மற்றொரு வழியாக வெளிவரும்.

மேலும் அதிகப்படியான பொதுமக்களும் இந்த நுழைவாயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதன் அருகே தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் எப்போது மழை பெய்தாலும் இந்த நுழைவாயில் உள்ளே மழைநீர் தேங்கி யாரும் பயன்படுத்த முடியாததை போன்று தீவு போல் மாறிவிடுகிறது.இதனால் ஆம்புலன்ஸ்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு மற்றொரு வழியாக மட்டுமே உள்ளே சென்று வெளியில் வருகிறது.

அதே சமயம் அந்த ஒரு நுழைவாயிலையே பொதுமக்களும் பயன்படுத்துவதால் அங்கு நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.தேங்கிய மழை நீரை மருத்துவமனை நிர்வாகமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ இயந்திரங்களை கொண்டு அகற்றிய பிறகுதான் இந்த வழியை மீண்டும் பயன்படுத்த முடிகிறது.

எனவே இந்த நுழைவாயிலின் உள்ளே மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க