• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மல்யுத்தப் போட்டியில் 14 வயது சிறுமி மரணம்

January 6, 2017 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற 14 வயது சிறுமி எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து, மரணம் அடைந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மாதவன் நகரைச் சேர்ந்த கென்னடி என்பவரின் மகள் மாரீஸ்வரி (14). சோரீஸ்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படித்து வந்தார். இவர் மல்யுத்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தூத்துக்குடி மாவட்ட அளவிலான மல்யுத்தப் போட்டி வெள்ளியன்று நடைபெற்றது. இதில், குத்துச் சண்டை களத்துக்கு காலையில் வந்த மாரீஸ்வரி முதல் சுற்றில் பங்கேற்று விட்டுத இரண்டாவது சுற்றில் விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தார்.

பின்னர், மதிய உணவு இடைவெளியின்போது திடீரென மாரீஸ்வரி மயக்கமடைந்து மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடன் இருந்த அனைவரும் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இதனையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மல்யுத்தப் போட்டிகளில் எதிர்காலத்தில் இன்னும் நிறைய சாதிப்பதற்கு கனவு கண்ட மல்யுத்த வீராங்கனையின் திடீர் மரணம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க