• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலாலாவிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து

July 8, 2017 தண்டோரா குழு

லண்டனில் மலாலா யூசப் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்து, பட்டம் பெற்றதற்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்(19) லண்டன் எக்பாச்டன் மேல்நிலைப்பள்ளியில், தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். பள்ளிபடிப்பிற்கான பட்டத்தை நேற்று(ஜூலை 7) லண்டனில் பெற்றுள்ளார். அவருடைய வெற்றிக்கு உலக தலைவர்கள் பலர் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில், தலிபான்கள் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடைவிதித்தனர். ஆனால் மலாலா யூசப் அதையும் மீறி பள்ளிக்கு சென்றதோடு, பெண்கள் கல்வி கறக்கவேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார். இதனால் கோபம் அடைந்த தலிபான் ஒருவன் மலாலவை கடந்த 2௦12ம் ஆண்டு தலையில் சுட்டான்.

இதனால், மலாலா முதலில் பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.பிறகு லண்டன் ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்கு பின் தொடர்ந்து பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து குரல் கொடுத்து வந்தார். இதற்காக கடந்த 2014ம் ஆண்டு, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,மலாலா தற்போது லண்டன் எக்பாச்டன் மேல்நிலைப்பள்ளியில், தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“இன்று என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி நாள். மேல்நிலைப் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை முடிக்க முடியால் இருப்பதை நான் அறிவேன். மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து, அங்குள்ள பெண்களை சந்திக்கவுள்ளேன்”எனக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 2௦13ம் ஆண்டு முதல் இங்கிலாந்திலுள்ள எக்பாச்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்று வரும் மலாலா கடந்த 2௦15ம் ஆண்டு பள்ளியில் நடைபெற்ற GCSE தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும், மலாலா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களை படிக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க