• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் – பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர்

April 12, 2017 தண்டோரா குழு

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் யுவ மோட்சா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டம் சூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து தடையை மீறி அங்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.

இந்த தடியடி தாக்குதலுக்கு பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினே கடும் கண்டனம் தெரிவித்து கூறுகையில், “ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் பக்தர்கள் மட்டுமே. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மம்தா அரசு முஸ்லீம்களை திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களை குறிவைத்து அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது. மம்தாவின் தலையை கொண்டு வெட்டி வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும்.” என்றார் அவர்.

இந்த அறிவிப்பால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க