• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனிதாபிமானமற்ற பொருளாசை.

May 17, 2016 தண்டோரா குழு.

கோழி இறைச்சி பதனப்படுத்தப்படும் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அவர்களது இயற்கை உபாதைகளைக்கூடப் பூர்த்தி செய்ய அனுமதிக்காத காரணத்தினால் மல, ஜலத்தை வெளியேற்ற இவர்கள் அரையாடையை (diaper) அணிந்து கொள்ளும் அவலம் மிக நாகரீகநாடான அமெரிக்காவில் நிலவுகிறது.

இந்தச் செய்திகளை oxfam america என்ற இங்கிலாந்து சார்ந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குழு மக்களின் பிரச்சனைகளை அலசி, ஆராய்ந்து வெளிக்கொணரும். உலகத்தையே வறுமை இல்லாத நாடாக்க வேண்டும் என்பதிலிருந்து, கிரீஸ் அகதிகளின் நிலைமை, ஊட்டச் சத்து குறைவால் ஏற்படும் தீமை போன்ற பல்வேறு பிரச்சனைகளும் இவர்களது ஆய்வில் அலசப்படும்.

இவர்களது அறிக்கை அமெரிக்காவின் 4 நிறுவனங்களைக் குற்றஞ்சாட்டியுள்ளது. Tyson Foods, Pilgrim's, Perdue, and Sanderson Farms .இந்த 4 நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 1,00,000 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அமெரிக்காவின் இறைச்சித் தேவையை 60 சதவிகிதம் இந்த நிறுவனங்கள் பூர்த்தி செய்து விடுகின்றன. ஆகையால் நல்ல லாபமும் ஈட்டுகின்றன.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் படி இங்குப் பணிபுரியும் தொழிலார்களுக்கு தங்கள் இயற்கை உபாதைகளைப் பூர்த்தி செய்ய அவகாசம் அளிக்கப்படுவதில்லை. அந்த குறைந்த நேரமும் வீணடிக்கப்படாமல், வேலையாட்கள் வேலை செய்வதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கி மேலும் அதிக லாபம் அடையலாம் என்பது நிர்வாகத்தின் கணிப்பு என்று சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்பார்வையாளர்களால் தொழிலாளிகள் இந்தத் தேவையான இடைவெளி அளிக்க மறுக்கப்படுகின்றனர். அதை மீறும் பட்சத்தில் பணியை விட்டே விலக வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாக்கப்படுகிறனர். மேலும் குறைந்த அளவே திட, திரவ உணவுகளை உட்கொள்ளவும் பணிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக தொழிலாளர்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள். மல ஜலத்தை அடக்குவதன் காரணமாக அந்தப் பாகங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆண்களை விடப் பெண்கள் அடையும் இன்னல்கள் இன்னும் அதிகம். பெண்களின் மாத இயற்கைப் போக்கின் போது ஓய்வு அறையை உபயோகிக்க முடியாததால் அவர்கள் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகிறார்கள். கர்ப்பமுற்றப் பெண்களின் நிலையும் இதுவே.

ஆக்ஸ்ஃபாம் அமெரிக்காவின் அறிக்கையின் ஈ மெயிலுக்கு ஒவ்வொரு நிர்வாகமும் பதிலளித்துள்ளது.
நிர்வாகத்தின் விதிப்படி, பணி நேரத்தின் மத்தியில் தொழிலாளர்களுக்கு இயற்கைஉபாதைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான கால அவகாசம் கொடுக்க மறுப்பது குற்றமாகும்.

அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மையைக் கண்டறிந்து, நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யப்படும். இதுவரை இந்தக்குற்றச் சாட்டுக்களுக்கான ஆதாரம் எதுவுமில்லை.

தொழிலாளர்களின் எல்லாவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதே நிர்வாகத்தின் முக்கியக் குறிக்கோள் என்று டைசன் குரூப் பதிலளித்துள்ளது. சுமார் 8 மணிநேர வேலைக்கு மத்தியில் இரு முறை 30 நிமிட இடைவெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அதை விடுத்து அவசரத்தேவை ஏற்படும் பட்சத்தில் தங்கள் வேலையை தற்காலிமாக மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு சிலர் ஓய்வு அறைக்குச் செல்வதுமுண்டு என்று பெர்டுயு நிறுவனம் பதிலளித்துள்ளது.

தொழிலாளர் நலக் கூட்டத்தின் போதோ, அல்லது வெளியாரால் நடத்தப்படும் சுகாதார,பாதுகாப்பு, ஆய்வின் போதோ இந்த இயற்கை உபாதைப் பிரச்சனை பற்றி எவரும் எதுவும் எழுப்பவில்லை. தொழிலாளர்களின் நலனே தங்களது மூலதனம். அதனால் அவர்களது உடல் நலனும், சுகாதாரமும் தங்கள் நிறுவனத்திற்கு மிக முக்கியம் என்று பில்கிரிம் பிரைட் நிறுவனம் பதிலளித்துள்ளது.

சாண்டர்சன்ஃவாம் முக்கியஸ்தரான மைக் காக்ரெல் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஏதோ கையளவு நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தொழிற்சாலைகளைப் பற்றியும் தீர்மானிப்பது, விமரிசிப்பது, மிகவும் தவறான செயலாகும். அப்படியே ஏதேனும் எங்கேனும் நடந்திருந்தால் விசாரித்துத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேஷனல் சிக்கன் அசோசியேசன் பதிலளித்துள்ளது.

மேலும் படிக்க