September 27, 2025
தண்டோரா குழு
சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் பயின்று கோவையில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் புதிய அறக்கட்டளை துவக்க விழா கோவை லட்சுமி மில் பகுதியில் நடைபெற்றது.
இவ்விழாவில் கௌரவ விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்,கோவை நீதிமன்ற முதன்மை நீதிபதி விஜயா,தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் சரவணன், மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், சேலம் மத்திய சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கோயம்புத்தூர் அத்தியாயத்தின் சார்பில் மத்திய சட்ட அறக்கட்டளை துவங்கப்பட்டது.இதனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
மேலும்,விழாவில் 30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் 3 சேர்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வை மூத்த வழக்கறிஞர் பிரபு சங்கர், வழக்கறிஞர்கள் விஸ்வநாதன்,கோபால் சங்கர்,ஸ்ரீஹரி,பிரபு ராம்,இந்திரா, ராமகிருஷ்ணன்,சிவ கணேஷ், கோபால் சங்க,ர் தினேஷ்,அரவிந்த், ராஜேஸ்வரி, பவித்ரா,நேரு,ஸ்வேதா வர்ஷினி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.