March 23, 2018
தண்டோரா குழு
மத்திய பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி நோட்டீஸை காங்கிரஸ் அளித்துள்ளது.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரியுள்ளது.
இந்நிலையில், லோக்சபா காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசு மீது காங். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி மக்களவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மக்களவையின் அலுவல்களில் 27-ம் தேதி நோட்டீஸை எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.