• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது’ – தம்பி துரை

July 15, 2017 தண்டோரா குழு

மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன, மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது என அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான
தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது லஞ்ச புகார்கள் தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சிகள் லஞ்சப்புகார்கள் தெரிவித்து அரசியல் செய்கின்றன, இதை அரசியல் ரீதியாக அ.தி.மு.க., எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

“தமிழகத்தில் நீட் பிரச்சினைக்கு காரணம் தி.மு.க.வும்,காங்கிரஸ் கட்சியுமே காரணம். தற்போது அந்த இரு கட்சிகளும் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது.

தமிழகத்திற்கு தேவையான பொறியியல், மருத்துவ மாணவர்களை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் ஆனால் மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் எடுத்து செல்ல முயல்கிறது.” என குற்றம்சாட்டினார்.

மேலும் இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்த தம்பிதுரை தமிழகம் முனிசிபாலிட்டியாக மாறாக கூடாது என்றார். மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது எனக் கூறினார்.

நீட் விவகாரம் கோர்ட்டிற்கு சென்று விட்டதால் மத்திய அரசை அ.தி.மு.க.,வால் வலியுறுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க., சார்பில் குரல் எழுப்பபடும் எனவும் தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் அ.தி.மு.க., மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

அதிமுக அணிகள் தொடர்பான கேள்விக்கு பதலளித்த அவர் “அதிமுகவில் ஓரே அணிதான் இருக்கிறது. பல அணிகள் இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர்.” என்றார்

நடிகர் கமல் அரசியலுக்கு வந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், ஆட்சியில் தவறுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும். அதிமுக மக்களுக்கு மட்டுமே பயப்படுகிறது மற்ற கட்சிகளுக்கு பயப்படாது என தம்பிதுரை கூறினார்.

மேலும் படிக்க