• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மண் வளப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்ஸ்கிரிதி மாணவர்கள்!

April 6, 2022 தண்டோரா குழு

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கோவையில் பொதுமக்களுக்கு இன்று (ஏப்ரல் 6) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை ரயில்நிலைய நுழைவு வாயில் முன்பு மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 40 ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் நம்முடைய பாரம்பரிய கலையான களரியின் மூலமும், ஃப்ளாஸ் மாப் நடனத்தின் மூலமும் மக்களின் கவனத்தை ஈர்த்து மண் வள பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இது தொடர்பாக ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கூறுகையில்,

“மண் வளம் என்பது உலகளவில் வேகமாக அழிந்து வருகிறது. ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (UNFAO) தற்போது நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், உலகில் மேற்பரப்பு மண்ணின் வளம் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் முற்றிலும் காணாமல் போய்விடும் என எச்சரித்துள்ளது. மேலும், சர்வதேச விஞ்ஞானிகள் 2045-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 930 கோடியாக அதிகரித்து விடும் எனவும், அதேசமயம், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விடும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது. அந்த நிலை உருவானால் உள்நாட்டு கலவரங்களும், பசி, பட்டினி பிரச்சினைகளையும் அதிகரிக்கும். ஆகவே, மண் வளத்தை காக்க நாம் இப்போதே களமிறங்க வேண்டும்.

உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தியும், இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘மண் காப்போம்’ என்ற உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கி உள்ளார். அதற்காக, அவர் லண்டனில் இருந்து தமிழ்நாடு வரை 3 கண்டங்கள் மற்றும் 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அத்துடன், உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் பல்வேறு வழிகளில் இவ்வியக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, நாங்கள் இந்நிகழ்ச்சியை இன்று கோவையில் நடத்தி உள்ளோம்.” என்றனர்.

மேலும் படிக்க