• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

February 6, 2018 தண்டோரா குழு

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க  விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க தமிழக அரசு ரூ.25,000 மானியம் வழங்குகிறது.இந்த மானிய விலை ஸ்கூட்டர்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது.

மேலும்,மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை மிகக் குறைந்த காலக் கட்டத்தில் பெற முடியாத நிலையில், பல பெண்கள் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வலியுறுத்தினர்.

இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்க