• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி முகவரியை பயன்படுத்தி 254 சிம் கார்டுகளை விற்பனை செய்த வாலிபர் கைது

May 19, 2023 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்( வயது 42). தனியார் நிறுவன ஊழியர். மேலும் இவர் சிம் கார்டுகளை ரோட்டோரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் போலி முகவரி மற்றும் வேறொருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 254 சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

இதனை பார்த்த தொலைதொடர்பு நிறுவனம் இது குறித்து சென்னையில் உள்ள கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இந்த வழக்கு கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் போலி முகவரி மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் படிக்க