• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்ட காலங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

December 1, 2020 தண்டோரா குழு

போராட்ட காலங்களில் நடந்துகொள்ளும் விதம் குறித்து கோவை மாநகர போலீசார் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், முத்தரசு, உமா, மேற்பார்வையில்
போராட்டக் காலங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்து போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சிகள் மாநகர பகுதிகளில் நடைபெற்றது.

கோவை மாநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான அமைப்புகள் போராட்டங்கள் நடத்துகின்றன. சில நேரங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.இவ்வாறு போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்துவது அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகரில் நடைபெற்றது.

மாநகர எல்லைக்கு உட்பட்ட 15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட அவினாசி ரோடு, அண்ணா சிலை சிக்னல், டவுன்ஹால், குனியமுத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் போலீசார் பங்கேற்றனர் போலீசார் இந்த ஒத்திகையின் நிகழ்ச்சியை பார்த்த பொதுமக்கள் நிஜத்தில் போராட்டம் நடப்பதாக கருதி அங்கிருந்து வேகமாக நகர்ந்து இதனால் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க