இருநாடுகளின் பொருளாதார உறவுகளை பலபடுத்தும் வகையில், இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி மூன்று நாள் அரசு பயணமாக போலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
ஹமீது அன்சாரியுடன் அவருடைய மனைவி சல்மா அன்சாரியும் சென்றுள்ளார். மத்திய சிறு குறு தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், சீதாராம் யெச்சுரி, டி.பி. திரிபாதி, விவேக் தங்கா உள்ளிட்டோரும் போலாந்து சென்றுள்ளனர்.
போலாந்து நாட்டின் பிரதமர் பியட்டா சைட்லோவை, அன்சாரி இன்று சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, சில ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். போலாந்து நாட்டின் குடியரசுத் தலைவர் அன்ட்ராஸ் டுடாவையும் அவர் இன்று சந்திக்க உள்ளார்.
மேலும், போலாந்து நாட்டின் பொருளாதார மேம்பாடு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்திய போலாந்து வணிக மன்றத்தில் அன்சாரி கலந்துக்கொண்டு பேச இருக்கிறார்.
இருநாடுகளின் பொருளாதார உறவுகளை பலபடுத்தும் வகையில், இந்த பயணம் அமைந்துள்ளது. இரு நாடுகளிலிருந்தும் சுமார் 15௦ தொழிலதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
மேலும் போலாந்து தூதர் பிசாரியா ஏற்பாடு செய்துள்ள விசேஷ இரவு உணவு விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் அவருடைய மனைவி சல்மா அன்சாரியும் கலந்துக்கொள்வர்கள் எனவும் அந்த விழாவின் போது, போலந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுவார் என்றும் கருதப்படுகிறது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்