• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை!

January 8, 2019 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14ந் தேதியை உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில், 12ம் தேதி சனிகிழமையே பலரும் பொங்கல் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், இடையில் 14ம் தேதி வேலை நாள் என்பதால் பலரும் செல்ல முடியாத சூழல் ஏற்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 14ந் தேதி உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக வரும் பிப்ரவரி 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 14ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறையாக இருந்தால் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க