• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக எச். ராஜா குற்றச்சாட்டு

January 20, 2022 தண்டோரா குழு

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளதாக கோவையில் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றச்சாட்டி உள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க.தேசியசெயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது ரூபாய் ஐந்தாயிரம் வழங்க கோரிய தற்போதைய முதல்வர் தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாக கலப்படமாக இருப்பதாகவும் கூறிய அவர்,பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். குடியரசுதின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு தமிழக அரசு இதில் நாடகம் ஆடுவதாகவும், கடந்த 2006 மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போதும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்ததாகவும், மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என கூறிய அவர் கடந்தல சில ஆண்டுகளில் பா.ஜ.க.ஆட்சி நடைபெறும் உ.பி.அரசிற்கு வாகன ஊர்தி அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தார். வரும் உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

பேட்டியின் போது தமிழக பா.ஜ.க.கலை கலாச்சார பிரிவின் மாநில செயலாளர் பி.வி.சண்முகம்,மாவட்ட செயலாளர் கார்த்தி,செல்வபுரம் மண்டல் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க