• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் மத்திய பா.ஜ.க அரசு தயங்குகின்றது – திருமாவளவன்

September 15, 2018 தண்டோரா குழு

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் மத்திய பா.ஜ.க அரசு தயங்குகின்றது என விடுதலைசிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

அரசியலமைப்பு சட்டத்தின் படி பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கலாம் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அதிகாரம் இருக்கின்றது என்று கூறியும் , ஆளுநர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் என கேள்வி எழுப்பிய திருமாவளவன், இது தொடர்பாக ஆளுநரை தமிழக அரசு சந்தித்து முறையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். ராஜீவ் வழக்கில் சிகையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய பாஜக தயங்குகிறது. பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால் 7 பேருக்கு விடுதலை இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்த நிலையில், தற்போது உண்மை நிலை வேறாக உள்ளது. மேலும் ரகுராம் ராஜன் அறிக்கை குறித்து பிரதமர் மோடி வாய்த்திறக்கவில்லை. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 லட்சம் கோடி வாராக்கடன் இந்த ஆட்சியில் மட்டும் வழங்கவில்லை என்றாலும், 80% வாராக்கடன் பாஜக தலைமையிலான ஆட்சியில் வழங்கபட்டுள்ளதால் இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.

நிலக்கரி விவகாரம் மட்டுமின்றி நீட் தேர்வு, ஒக்கி புயல் நிவாரண நிதி, தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என பல்வேறு விவகாரங்களுக்கு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. மத்திய அரசின் மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட்ட அரசாக தற்போதைய மாநில அரசு உள்ளது. தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமியர் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் வருமான வரித்துறை, சி.பி.ஐ சோதனைகள் அதிகமாக நடக்கிறது. சோதனை நடைபெறுகிறது என்பதால் குற்றவாளி என்று அர்த்தம் கிடையாது. இந்த சோதனைகள் மூலம் அரசை அச்சுறுத்தகிறார்கள் அல்லது மக்களிடம் அக்கட்சியின் மதிப்பை குறைக்கவே இதுபோன்ற சோதனை நடைபெறுகிறது என்ற கருத்தும் இருக்கின்றது.. குட்கா விவகாரத்தில் புகாருக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் பதவி வழங்கியிருப்பது வியப்பை அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க