• Download mobile app
28 Sep 2026, MondayEdition - 3883
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம்

March 15, 2017 தண்டோரா குழு

புதிய வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் மற்றும் பான் கார்டு, கைபேசி எண் கட்டாயம் ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையாளர் தயானந்த் கட்டாரியா கூறுகையில்,

“புதிய இரு சக்கர வாகனம், கார் போன்றவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு இதுவரையில் இருப்பிடச் சான்றாக ரே‌ஷன் கார்டு, மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன.

இனி, வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு கைபேசி எண் போன்ற ஆவணங்களை வழங்கினால் மட்டுமே புதிய வாகனங்களைப் பதிவு செய்ய முடியும். மேலும், இது தொடர்பாக அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது”. என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க