• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய பரிமாணங்களை நோக்கி இந்திய வங்கித்துறை வங்கியின் நிதி வலிமையுடன் நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு, நிலையான சேவையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள்

March 16, 2026 தண்டோரா குழு

வங்கித்துறையில் ‘நம்பிக்கை’ என்பது எப்போதும் மையமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது, ஆனால் அந்த நம்பிக்கையை உருவாக்குவது எது என்பது இப்போது மாறியுள்ளது.

இன்றைய வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவல்களை அறிந்தவர்களாகவும், தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும், தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.அவர்கள் இப்போது வங்கியின் நிதி வலிமையை மட்டும் எதிர்பார்க்கவில்லை; நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நிலையான சேவை ஆகியவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். நிதித்துறை சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய ஆண்டுகளில், வங்கித் துறையானது தனது சேவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தியது.

முறையான வங்கி பரிவர்த்தனைகளுக்குள் அதிகமான மக்களைக் கொண்டுவருவது ஒரு முக்கிய பொருளாதார மற்றும் சமூக முன்னுரிமையாக இருந்தது, இதில் வெற்றியும் கிடைத்துள்ளது.இப்போது வங்கிச் சேவைகள் நாடு முழுவதும் பரவலாக விரிவடைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் இன்னும் உறுதியான ஒன்றை எதிர்பார்க்கிறார்கள்: அதாவது, மாறும் சூழ்நிலைகளிலும் தங்கள் வங்கி நம்பகமானதாகவும் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை, நம்பிக்கை என்பது வங்கியின் நேரடித் தொடர்புடையதாக இருந்தது. அருகில் உள்ள கிளை, நன்கு தெரிந்த ஊழியர்கள் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய நடைமுறைகள் ஆகியவை மக்களுக்கு ஆறுதல் அளித்தன. வங்கியின் நிலைத்தன்மை தான் அவர்கள் நம்பிக்கையை உருவாக்கியது.ஆனால் தொழில்நுட்பம் இத்துறையை மாற்றியமைத்தபோது, ‘வசதி’ என்பது வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. வேகமான பரிவர்த்தனைகள் மற்றும் எளிமையான நடைமுறைகள் அன்றாட வங்கிப் பணிகளை மேம்படுத்தின.

காலப்போக்கில், இந்த வசதிகள் ஒரு வங்கியின் சிறப்பம்சங்கள் என்ற நிலையைத் தாண்டி, அனைத்து வங்கிகளிடமும் கட்டாயம் எதிர்பார்க்கப்படும் அடிப்படை சேவைகளாக மாறிவிட்டன.வங்கிச் சேவைகள் தேவைப்படும்போது, எந்த வழியிலாவது (மொபைல், இணையம்) தடையின்றி கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் இப்போது உறுதியாக நம்புகிறார்கள். அவர்களின் கவனம் இப்போது ‘நம்பகத்தன்மையின்’ பக்கம் திரும்பியுள்ளது.

தொழில்நுட்ப அமைப்புகள் சுமுகமாகச் செயல்பட வேண்டும், வாடிக்கையாளர் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மற்றும் செயல்பாட்டு ஒழுக்கம் தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.எனவே ‘பாதுகாப்பு’ என்பது இப்போது பரந்த அளவில் புரிந்துகொள்ளப்படுகிறது. வங்கியின் நிதி நிலைத்தன்மை முக்கியமானது என்றாலும், மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகள் எழும்போது உடனுக்குடன் செயல்படும் வங்கியின் திறன் ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.கடன்கள் எளிதாகக் கிடைப்பதால் வங்கிகள் மீதான எதிர்பார்ப்புகள் மக்களுக்கு இன்னும் அதிகரித்துள்ளது.

கடன் வழங்குவது கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறதா, வட்டி விகிதங்கள் வெளிப்படையாக இருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள விரும்புகிறார்கள். இது போன்ற நடைமுறைகள், ஒரு வங்கி தனது வணிக வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தனது வாடிக்கையாளர்களின் நீண்டகால நிதி பாதுகாப்பை ஆதரிப்பதிலும் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், நம்பகத்தன்மை, விவேகம் மற்றும் சீரான செயல்பாடு ஆகியவற்றால் மட்டுமே நம்பிக்கை மேலும் வலுப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு அன்றாட வங்கிப் பணிகளை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. சில வினாடிகளுக்குள் பணம் செலுத்த முடிகிறது, வங்கியின் கிளைக்குச் செல்லாமலேயே கணக்குகளைத் திறக்க முடிகிறது, மேலும் கடன் குறித்த முடிவுகளை முன்பை விட மிக வேகமாகத் தெரிவிக்க முடிகிறது. இந்த முன்னேற்றங்கள் தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் நிதி நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க எளிமையைக் கொண்டு வந்துள்ளன.

இந்த முன்னேற்றத்துடன், டிஜிட்டல் பாதிப்புகள் குறித்தும் வாடிக்கையாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இணைய மோசடிகள் மற்றும் தகவல்கள் திருடப்படுதல் போன்ற சம்பவங்கள் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளன. சேவை எளிதாகக் கிடைப்பது மட்டும் இனி மக்களுக்கு உறுதியளிப்பதில்லை; ஆபத்துகளை எதிர்கொள்ளும் தயார்நிலையே நம்பிக்கையைத் தருகிறது.கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வங்கித்துறை சீராக விரிவடைந்துள்ளது. சேவைகள் அனைவருக்கும் சென்றடைந்துவிட்ட நிலையில், இப்போது வங்கிகள் எடுக்கும் ‘முடிவுகளின் தரத்தின்’ மீது கவனம் திரும்பியுள்ளது. வங்கிகள் எவ்வாறு சரியான முடிவுகளை எடுக்கின்றன, குறிப்பாக மிக முக்கியமான நேரங்களில் எப்படிச் செயல்படுகின்றன என்பதில் வாடிக்கையாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

மேலும் படிக்க