• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மத்தியஅரசு சந்திக்க நேரிடும்- முக.ஸ்டாலின் எச்சரிக்கை

March 30, 2017 தண்டோரா குழு

தமிழ் மொழியை மட்டம் தட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட்டால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தை சந்திக்கவேண்டியிருக்கும் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில், ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவது கண்டனத்திற்குரியது.இந்தி திணிப்பில் அக்கறை காட்டும் பாஜக அரசு “இந்தி திணிப்பு”எதிர்ப்பு தமிழகத்தில் முனைமழுங்காமல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

இந்திக்கு மகுடம் சூட்டுவோம்.தமிழை மட்டம் தட்டுவோம் என பாஜக அரசு செயல்பட்டால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தை சந்திக்கவேண்டியதிருக்கும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க