• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியை பாதுகாப்பையும் மீறி சந்தித்த நான்கு வயது சிறுமி

April 17, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் காரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, பலத்த பாதுகாப்பையும் மீறி நான்கு வயது சிறுமி சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில், கிரண் பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை திறந்து வைத்தார். மருத்துவமனைக்கு பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருந்த போது வழியில் திரண்டிருந்த தொண்டர்கள் மோடியை வரவேற்றனர்.

இதையடுத்து, அந்த சாலையில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது, இதற்கிடையே, பலத்த பாதுகாப்பையும் மீறி நான்கு வயது சிறுமி ஒருவர், மோடியின் காரை நோக்கி சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத பிரதமரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எனினும், காரை நிறுத்திய மோடி, கதவை திறந்து சிறுமியிடம் சிறிது நேரம் பேசினார்.இதையடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். பிரதமரின் காரை, சிறுமி வழிமறித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க