• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரசித்தி பெற்ற சாமூண்டீஸ்வரி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

March 28, 2023 தண்டோரா குழு

கோவை உக்கடம் ராமர் கோவில் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சாமூண்டீஸ்வரி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை உக்கடம் ராமர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சாமூண்டீஸ்வரி திருக்கோவில்.கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் கோவில் புணரமைக்கும் பணிகள் நடைபெற்றன.பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடந்த மூன்று தினங்களாக யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில்,விழாவின் முக்கிய பகுதியான திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு,காலை வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது அதனைத் தொடர்ந்து விநாயகர் பூஜையுடன் துவங்கி பூர்ணாகதி யுடன் வேள்வி நிறைவு பெற்ற நிலையில் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் வளாகத்தை சுற்றி வந்து, மூலவர் அம்மன் மற்றும் பரிவார
கோபுரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்தார் பொதுமக்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் சுகாதார குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான மாரி செல்வன்,மற்றும் பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் மார்க்கெட் மனோகர் உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.. அதனை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இந்த மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்..விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சுப்ரமணி, கிருஷ்ணவேணி, மூர்த்தி,துரைசாமி,காளிதாஸ் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

மேலும் படிக்க