• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிப்ரவரி 1 முதல் மத்திய அரசு பணிகளில் 10% இடஒதுக்கீடு அமல் – மத்திய அரசு

January 24, 2019 தண்டோரா குழு

பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை பிப்ரவரி 1 முதல் மத்திய அரசு பணிகளில் அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமூகப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், பொருளாதாரரீதியில் பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. இதற்கிடையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றபட்டது. மேலும் இதையடுத்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டமானது.

இந்த இடஒதுக்கீட்டை நாட்டிலேய முதல் முறையாக குஜாராத் அரசு அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இந்த 10% இடஒதிக்கீடு திட்டத்தை அமல்படுத்த இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனையேடுத்து 10% இடஒதிக்கீடு திட்டத்தை பிப்ரவரி 1 தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பிப்ரவரி 1 முதல் மத்திய அரசு பணிகளில் ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறும் போது பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவு சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் படிக்க