• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“பிக் பாஸ்” மூலம் என்ன கற்றுக் கொள்ளலாம் – கமல் விளக்கம்

July 13, 2017 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் அண்மையில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்நிகழ்ச்சி குறித்து கடந்த சிலநாட்களாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கிடையே, கமல் இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பது குறித்து தனது விளக்கத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

‘அடுத்தவர் வீட்டில் நடக்கும் ஒரு சம்பத்தை வைத்து தான் ஒரு அறிவுரையை கூற முடியும். எடுத்துக்காட்டாக பக்கத்து வீட்டில் புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறதப்பார்த்தா, இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது என்று நம் வீட்டு பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பார்கள்’ என்று கூறினார்.

மேலும், ‘கூடி வாழ்தலால் உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் ‘பணமா பாசமா, பூவா தலையா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் கூட்டுக்குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அந்த படங்களில் பாலசந்தர் ஒருவரே திரைக்கதை வசனம் எழுதினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் அவரவர் வசனங்களை எழுதி கொள்கிறார்கள் அதுதான் வித்தியாசம்’ என்று கமல் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் படிக்க