• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை எத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

July 7, 2017 தண்டோரா குழு

உலக அளவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியாவில் வடமாநிலத்தில் முதலில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது தமிழில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 ஒளிபரப்பாகிறது. இதில் தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் கலந்து கொண்ட ஜூலி உள்ளிட்ட 15 பேர் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் கமல்ஹாசன் இதற்காக விளம்பரம் செய்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதம் தான் பெருமளவு பேசப்பட்டது. இதனால் அந்நிகழ்ச்சிக்கு நாளுக்குநாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கமல் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. பிக் பாஸ் அற்புதமாக தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது எனக் கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள கமல் என் வேலையை சுலபமாக்கிய விஜய் டிவிக்கு நன்றி.மேலும், இந்நிகழ்ச்சியை பார்த்த 3 கோடி 60 லட்சம் பார்வையாளர்கள் தான் பிக் பாஸ். அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க