• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் கணபதி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

February 6, 2018 தண்டோரா குழு

கோவையில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் மீதான ஜாமீன் மனு 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பிப் 3 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.அன்றைய தினம் இரவே இருவர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி் ஜான் மினோ முன்னிலையில் நடைபெற்றது.விசாரணையின் போது புலன் விசாரணை நடைபெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய 8 ம் தேதி வரை அவகாசம் தேவை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதால் , ஜாமீன் மனு மீதான விசாரணை 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கணபதி தரப்பு வழக்கறிஞர் ஞானபாரதி தெரிவித்தார்.

மேலும்,இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி , பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருடன் தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், துணைவேந்தரின் மனைவி பெயர் இடம் பெறவில்லை எனவும் வழகறிஞர் ஞானபாரதி தெரிவித்தார்.

மேலும் படிக்க