• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாண்டா கரடி வடிவில் சோலார் பண்ணை

July 8, 2017 தண்டோரா குழு

சீனாவின் டேடாங் பகுதியில் பாண்டா கரடி வடிவில் பெரிய சூரிய சக்தி பண்ணை(சோலார்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவின் டேடாங் பகுதியில், 248 ஏக்கர் சூரிய சக்தி பண்ணை 1௦௦ மெகாவாட் கொண்டது. இதில் அடுத்த 25 ஆண்டுகளில், 3.2 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பண்ணை ஒரு பெரிய பாண்டா கரடி வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதன் கண்கள் வெவ்வேறு திசைகளை பார்ப்பதாக அமைந்துள்ளது. அதன் கண்கள் மோனோக்ரிச்டலின் சிலிகான் சோலார் மின்கலங்களாலும் அதன் உடலின் வெள்ளை மற்றும் சாம்பல் பகுதிகள் மெல்லிய பிலிம் சோலார் மின்கலங்களால் ஆனது.

இந்த ஆலையின் முதல் கட்டட பணிகள் ஜூன் 3௦ம் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. வட மேற்கு சீனா பகுதிக்கு மின்சாரம் தருவதை தொடங்கியது. இரண்டாவது திட்டத்தின் பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.

“சூரிய மின் சக்தி ஆலையை ஒரு பாண்டா வடிவில் அமைப்பது மூலம், இளைஞர்களின் ஆர்வத்தையும் அதன் பயன்பாட்டிற்கான உற்சாகத்தை தூண்டுவதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது” என்று சீனா வியாபாரிகள் நியூ எர்னர்ஜி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் லீ தெரிவித்தார்.

மேலும் படிக்க