• Download mobile app
15 Apr 2026, WednesdayEdition - 3717
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் பலி 21 பேர் காயம்

February 24, 2017

பாகிஸ்தானின் லாகூர் நகரில் வியாழக்கிழமை(பிப்ரவரி 23) நடந்த இரண்டு வெடிகுண்டு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர் 21 பேர் காயமடைந்தனர்.

லாகூர் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள மேல்தட்டு சந்தையில் முதல் வெடிகுண்டு வெடித்தது. அதில் 5 பேர் உயிரிழந்தனர் 21 பேர் காயமடைந்தனர். முதல் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் குல்பர்க் நகரில் இரண்டாவது வெடிகுண்டு வெடித்தது. இதில் நேர்ந்த சேதம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

“குல்பர்க் நகரில் வெடித்த வெடிகுண்டு சம்பவம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷாப்பிங் மையம் மற்றும் உணவகங்களிருக்கும் முக்கிய இடத்தில் இரண்டாவது வெடிகுண்டு வெடித்தது” என்று பஞ்சாப் அரசு அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டின் ஜியோ தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், “ஜெனரேடர் ஒன்று வெடித்தது என்று முதலில் தெரிவித்தது. ஆனால் சம்பவ இடத்திலிருந்து வெளியான செய்தியில், அங்கு வெடிகுண்டு வெடித்துள்ளது, அதன் சேதம் குறித்து தெரியவில்லை” என்று தெரிவித்தது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாத அலை நடந்துக்கொண்டு வருகிறது. இதில் நாடு முழுவதிலும் 13௦ பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இம்மாதம் தெற்கு சிந்து மாகணத்தின் சூபி மசூதியில் நடந்த தாக்குதல்தான் பயங்கரமானது. இதில் 9௦ பேர் உயிரிழந்தனர்.

“வியாழக்கிழமை நடந்த விபத்தில் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று சரியான எண்ணிகையை குறித்து தகவல் தர இயலாது” என்று பஞ்சாப் காவல்துறை செய்தித்தொடர்பாளர், நயப் ஹைதர் தெரிவித்தார்.

சந்தையில் உள்ள வங்கியில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், “வங்கியின் உள்ளிருந்த போது அச்சுறுத்தலான சத்தம் கேட்டு வங்கி அதிர்ந்தது. கட்டடத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ பற்றியிருந்தது. அருகில் இருந்த கட்டடத்தின் ஜன்னல்கள் நொறுங்கியிருந்தது” என்றார்.

மேலும் படிக்க