• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்லடம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

December 19, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்,இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் கார்த்தி மற்றும் மாணிக்கராஜ். இதில் கார்த்தி கடந்த வாரம் புதிதாக மாருதி வேன் வாங்கியுள்ளார். இந்நிலையில் இன்று(டிச 19) திருப்பூரில் இருந்து கார்த்தி மற்றும் மாணிக்கராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 4 நண்பர்களுடன் கோவைக்கு வேனில் சென்றுவிட்டு நள்ளிரவு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குப்புசாமிநாயுடுபுரத்தை அடுத்த ஜி.டி.என்.கம்பெனி அருகே வேன் வந்துகொண்டிருந்த போது, எதிரே திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த கார்த்திக், அவரது சகோதரர் மாணிக்கராஜ் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.

மேலும்,இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்தும் இறந்தவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க