• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சாவு: ஊழியர்கள் மீது உறவினர்கள் புகார்

February 21, 2017 தண்டோரா குழு

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் கோவை அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் புகார் மனுவைக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மைகேல்ராஜ். 56 வயதான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதை அறிந்தனர்.

இதையடுத்து அதனை உறுதி செய்யவும், மேற்கொண்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளவும் பிப்ரவரி 15-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் பிப்ரவரி 17- ம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், செயற்கை சுவாசக் கருவி பொருத்த வேண்டும் என அவரின் மனைவி அங்கு பணியாற்றிய செவிலியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு, “செவிலியர் இங்கு செயற்கை சுவாசக் கருவியில்லை. அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் சென்று 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்தக் கருவியை உடனே வாங்கி வாருங்கள் “ என்று சொன்னார்கள் என்று அவரது மனைவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மூச்சுத் திணறல் அதிகரித்து மைகேல்ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் அவரது மனைவியிடம் தெரிவித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலச்சியத்தால்தான் மைகேல்ராஜ் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் அரசு மருத்துவமனையில் இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்பதற்காக மைகேல்ராஜ் உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனுவை அளித்தனர்.

கோவையில் அரசு மருத்துவமனையில் இது வரை பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 29 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ஒருவர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க