• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு

April 24, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு திங்கட்கிழமை முதல், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.மத்திய உளவு பிரிவு போலீசார், பன்னீர் செல்வம் செல்லும் இடங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர். அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் முதல்-அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.துப்பாக்கி ஏந்திய 8துணை ராணுவப் படையினர் பன்னீர் செல்வத்துக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க