• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற 2 டன் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

December 26, 2022 தண்டோரா குழு

பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ரோஜா, மல்லி,தாமரை என சுமார் 2 டன் மலர்களால் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்,கோவை வடவள்ளி,நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தொடர்ந்து 21 ஆம் ஆண்டாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி,கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்,சுதர்சன மற்றும் நவக்ரஹ ஹோமங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து குமாரி காம்யா ஸ்ரீ தலைமையான குழுவினர் நாமசங்கீர்த்தனம் பாடி அசத்தினர். இதனை திடீரென அடாது பெய்த மழையிலும் கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் வாத்யார் தலைமையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது..

இதில் பதினெட்டு படிகளுக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தத்ரூபமாக வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு தாமரை,ரோஜா,மல்லி,சாமந்தி, சுமார் 2 டன் எடையில் 18 வகை மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருமூர்த்தி ஐயர், ராஜா வாத்யார் மது வாத்தியார், மணி ஸ்ரீ வாத்தியார், சதீஷ் அகரா மாங்குடி ஐயர், மகேஷ் உட்பட பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க