• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஞ்சாப்பில் நடந்த முதல் ஓரின சேர்க்கை திருமணம்

April 28, 2017 தண்டோரா குழு

பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலந்தின் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சித் சாந்து(43). இவர் பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.இவருடைய பெற்றோர்கள் 1985ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரத்தில் உயிரிழந்துவிட்டனர். மஞ்சித்தின் உறவினர்கள் அவரையும் அவருடைய சகோதரியையும் வளர்த்தனர்.

இவர் தனது காதலியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வீட்டில் கூறினார்.முதலில் எதிர்ப்பு கிளம்பியது.ஏனெனில் பெண்ணான மஞ்சித் காதலிப்பது இன்னொரு பெண்ணை! மஞ்சித் அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று வற்புறுத்தியதால் இரண்டு பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

இவருடைய ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.இவர்கள் திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பஞ்சாபில் நடந்த முதல் ஓரின சேர்க்கை திருமணம் இதுவாகும்.

“மஞ்சித் தனது பணியில் அர்பணிப்புடன் இருக்கும் வரை அவருடைய தனிப்பட்ட வாழ்கையில் நாங்கள் தலையிடமாட்டோம்” என்று மஞ்சித்தின் அதிகாரி கூறினார்.

மஞ்சித் கூறுகையில்,

“நான் மற்ற பெண்களை போன்ற பெண் தான். ஆணாக மாற எந்த அறுவை சிகிச்சையும் செய்துக்கொள்ளவில்லை. என்னுடைய திருமணத்திற்கு உறவினர்களும் நண்பர்களும் ஆதரவு அளித்தனர். மேலும், என்னுடைய மனைவி ஒரு விதவை. அவளுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அந்த குழந்தையை சட்டபூர்வமாக தத்தெடுத்துகொண்டேன். என் வாழ்க்கை பூரணமாக உள்ளது” என்றார்.

மேலும் படிக்க