• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பங்களாதேஷில் இரண்டாவது தீவிரவாதத் தாக்குதல்

July 7, 2016 தண்டோராக் குழு

மற்றுமொரு வெறிச் செயல் ,தீவிர வாதிகளால் பங்களா தேஷ் ல் அரங்கேறியுள்ளது.இஸ்லாமிய சித்தாந்தத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதே குறிக்கோள் எனக் கூறிக்கொண்டே இஸ்லாமியத் திருநாளான ரமலான் அன்று 300000 முஸ்லீம் பக்தர்கள் திரண்டிருந்த மசூதியில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஷொலகிய எய்ட்கஹ் ன் பரந்த வெளியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் கூடி ரமலான் தொழுகை நடத்துவது வழக்கம். 19ம் நூற்றாண்டில் துவங்கிய இவ் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

இது ஒரே வாரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் ஆகும்.தலைநகரான டாக்கா விலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிஷொரெகஞ்ச் நகரத்தில் இட் அல் ஃபிற் விழாத் தொழுகை நடைபெறும் நிலையில் வெடி குண்டுகள்,மற்றும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.

இதில் ஒரு காவலர் குண்டு வெடித்ததாலும்,மற்றொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டும் இறந்தனர்.பெண்மணி ஒருவரும் இந்த தாக்குதலில் மாண்டுள்ளார் , 14 பேர் காயமடைந்துள்ளனர் என மாவட்டத் தலைமை அதிகாரி மொஹம்மட் அழிமுட்டின் பிஸ்வச் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கொல்லப்பட்டதாகவும்,மூவரைச் சிறைப் பிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலையென எழும் இவ்வன்முறைச் செயல் 160 மில்லியன் மக்களை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் பெரிதும் அச்சுறுத்துகிறது .ஆடை ஏற்றுமதியே இன் நாட்டின் பிரதான வருவாய்.இத்தகைய வன்முறைச் சம்பவங்களால் வெளிநாட்டவர் அவ நம்பிக்கை அடைவர்.அதன் காரணமாக கிட்டத்தட்ட 26 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்.வாடிக்கையாளர்கள் சங்கடத்திற்கு உள்ளாவர் என்று ஆடை ஏற்றுமதியாளர் முஹம்மட் சைஃபுல் ஹொக்வெ கூறியுள்ளார்.

நாட்டில் நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது.ஒவ்வொரு சம்பவமும் அதனை உறுதி செய்கிறது.இது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு முரணானது என்று முன்னாள் அயல் நாட்டு அமைச்சக அதிகாரி முஹம்மட் ஸ்மிர் கூறினார்.

இத்தகைய வன்முறைச் செயல்கள் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் பல பேருடைய கையெழுத்தை சேகரிக்கும் பணியில் மதத் தலைவரான ஃபரிட் உட்டின் மசுட் ஈடுபட்டுள்ளார்.இன்றைய தாக்குதல் தன்னைக் குறி வைத்தே என்று கூறியுள்ளார்.இதற்கு முன்பும் பலமுறை தன்னை தொலைபேசியில் பலர் மிரட்டியுள்ளதாகவும்,மக்களிடையே பீதியைக் கிளப்புவதே இவர்களது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

போன வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.அதையடுத்து எல்லா சமய ஸ்தலங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினர்.அதன் விளைவாகப் பெருத்த சேதத்தைத் தவிர்க்க முடிந்தது என்றும் கூறப்பட்டது.

தீவிர வாதிகள் அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களானாலும் சரி அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஐச் சேர்ந்தவர்களானாலும் சரி ,உள் நாட்டவரேயாயினும் சரி,வன்முறையால் அரசைப் பணிய வைக்கமுடியாது என்று பங்களா தேஷின் உள்துறை அமைச்சர் அசாட் ஸமன் கான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.தங்கள் வலிமையால் எதையும் எதிர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க