• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிபதி கர்ணன் மீண்டும் அதிரடி உத்தரவு

May 3, 2017 தண்டோரா குழு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன்,

” உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றால், போலீஸ், டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை, டெல்லி போலீஸ் டி.ஜி.பி., செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதி கர்ணன் கூறினார்”.

மேலும் படிக்க