• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

January 9, 2019 தண்டோரா குழு

சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு கையாளும் நிலையை பார்த்தால், நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலைகடத்தல் வழக்கில் தமிழக அரசு தரப்பு நடவடிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகியும் இன்னும் அவருக்கு அலுவலகம் ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலை நியமித்து 50 நாட்களாகியும் இன்னமும் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும் நிலையில், சிறப்பு அதிகாரி ஏன் தொடரக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி,சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணை நடந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டும் கிண்டியில் தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்.மாணிக்கவேல் தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் வேண்டாம் எனக்கூறியதாக தெரிவித்தார். அப்போது, டிஜிபியின் உதவியாளர் ஒருவர் கேட்டதால் தான் சாவியை ஒப்படைத்ததாக விளக்கம் அளித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து 50 நாட்களாகியும் இன்னும் ஒரு அலுவலகம் கூட வழங்காததைக் கண்டித்தனர். சிலை கடத்தல் தடுப்பு வழக்கை தமிழக அரசு கையாளுவதை பார்க்கும் போது, நீதித்துறை கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க