• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

December 29, 2021 தண்டோரா குழு

ரூ.12 லட்சம் மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் லக்குமநாயக்கன்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது.இந்த நிதி நிறுவனத்தை எஸ்.டி. சாமிநாதன், எஸ்.பி. முத்துவேல், மாணிக்கம், ராஜேந்திர குமார், லோகநாயகி, செல்வி உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். இவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 24 சதவீதம் வட்டியாக அதிக லாபம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறியுள்ளனர்.

இதை நம்பி 20 முதலீட்டாளர்கள் ரூ.12 லட்சத்து 66 ஆயிரம் முதலீடு செய்து உள்ளனர். ஆனால் அறிவித்த தேதிகளில் அசல் மற்றும் வட்டியை திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட காங்கயம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் எஸ்.டி.சாமிநாதன், எஸ்.பி. முத்துவேல், மாணிக்கம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். ராஜேந்திர குமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் மீது குற்றம் புரிந்தமைக்கான முகாந்திரம் இல்லாத காரணத்தினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சாமிநாதன் மற்றும் மணிவேல் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க