• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவீன மறுசுழற்சி குப்பை தொட்டியை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் !

January 31, 2019 தண்டோரா குழு

நவீன மறுசுழற்சி குப்பை தொட்டியை முதலமைச்சர் பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

சமீபத்தில் ஒரு முறை பயன்படுத்தி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நவீன மறுசுழற்சி குப்பை தொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நவீன மறுசுழற்சி குப்பை தொட்டியை முதலமைச்சர் பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மறுசுழற்சி இயந்திர உற்பத்தியாளர் ஹெப்சிபா, முதல் கட்டமாக 500 மறுசுழற்சி குப்பை தொட்டியை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் பிளாஸ்டிக் ஒழிக்க முடியும். இதை தயாரிக்க 50 லட்சம் ரூபாய் செலவாகும் , பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்று கூறினார்.

மேலும், இந்த மறுசுழற்சி குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பாட்டிலை போடுவதன் மூலம் மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அதை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சலுகைகள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க