• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

January 16, 2020 தண்டோரா குழு

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர். அதன்பின் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதனைத்தொடர்ந்து ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கெவரு’ படத்திலும் நடித்திருந்த ராஷ்மிகா தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அதனை பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் பெங்களூரு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 7.30 மணியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ராஷ்மிகா மந்தனா வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க