• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் வெட்கப்பட வேண்டும் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட்

June 21, 2018 தண்டோரா குழு

துப்பாக்கி, கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பர்ஸ்ட் லுக்கை பார்த்து கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோளை ஏற்று நான் நடிக்கும் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது என்று,முன்பு விஜய் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதுவெளியாகி இருக்கும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருக்கிறது.

இந்நிலையில், சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவீட் செய்துள்ளார். அதில்,தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சிகளை விளம்பரப்படுத்துவதற்கு நடிகர் விஜய் வெட்கப்பட வேண்டும். சிகரெட் இல்லாமல் இருந்தால் கூட நீங்கள் இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள்எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க