• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி தீர்ப்பு

April 21, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளைதள்ளுபடி செய்தது.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்யும் படி தனுஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனுஷ் நேரில் ஆஜராகி அங்க அடையாளங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையில், தனுஷின் கல்வி சான்றிதழ் போலியானது எனவும் அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என மேலூர் தம்பதியினர் கூறிவந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்த நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளைதள்ளுபடி செய்தது.

தனுஷ் எங்கள் மகன் தான் என்பது மனசாட்சிக்கு தெரியும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என கதிரேசன் தம்பதியினர் கூறினார்.

மேலும் படிக்க