March 23, 2018
தண்டோரா குழு
தனுஷ்க்கு எதிராக மேலூரை சேர்ந்த கதிரேசன் – தம்பதி தொடர்ந்த மனு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து,தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை கண்டறிய உத்தரவிடக்கோரி கதிரேசன் தம்பதியினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் , மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்தது உத்திரவிட்டது.