• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3000 ஓய்வூதியம் – விஷால்

February 3, 2018 தண்டோரா குழு

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

குருதட்சணை திட்டத்தின் கீழ் 65 முதல் 69 வயது வரை உள்ள உறுப்பினருக்கான ஓய்வூதியம் ரூ.500 இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 70 முதல் 79 வயது வரை உள்ள உறுப்பினருக்கான ஓய்வூதியம் ரூ.1000 இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதந்திர ஓய்வூதிய தொகை ரூ 2000 லிருந்து 3000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் நடைப்பெற்ற நட்சத்திர கலைவிழா மூலம் நமது சங்க கட்டட பணிக்கு வந்த நிதி உதவியிலிருந்து தங்களது வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு இந்த ஓய்வூதியம் உயரத்தப்பட்டுள்ளது  என்றும்,இந்த உயர்த்தப்பட்டு ஊதிய தொகை 2018 பிப்ரவரி முதல் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க