• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கான காவலருக்கு சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது

April 7, 2017 தண்டோரா குழு

தெலுங்கான மாகாணத்தின் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் காவலர் குக்குக்டாபு ஸ்ரீனிவாசலு என்பவருக்கு புதுதில்லியில் சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.தெலுங்கான மாகாணத்தின் புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்படுவதற்கு முன், பெங்களூரில் பணியாற்றி வந்தார் அவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றவாளிகள் இருவரை பிடிக்க சென்ற போது குற்றாவாளிகள் அவரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.எனினும் அவர்களை பிடிக்க தனது வாகனத்தில் அவர் விரைந்துள்ளார்.

பல மணி நேரத்திற்கு பிறகு அந்த குற்றவாளியை மடக்கி பிடித்துள்ளார். ஆனால், மீண்டும் தப்பிக்க முயன்ற குற்றவாளி ஸ்ரீனிவாசலுவை தாக்கியுள்ளான். பலத்த காயமடைந்த அவர், தனது காயங்களை பெரிதாக எண்ணாமல், குற்றவாளி தப்பி செல்லக்கூடாது என்று போராடினார். இறுதியில், குற்றவாளியை கைது செய்து, பெங்களூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பலத்த காயங்களுடன் குற்றவாளியை கொண்டு வந்ததை கண்ட காவல்துறையினர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர். பிறகு, ஸ்ரீனிவாசலுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.அவருடைய வீர செயலை பாராட்டி, புதுதில்லியில் வியாழக்கிழமை(ஏப்ரல் 6) அவருக்கு சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க