• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெர்மாகோல் திட்டம் பாராட்டுகளையே பெற்றுள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜூ

April 25, 2017 தண்டோரா குழு

தெர்மாகோல் திட்டம் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டுகளையே பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க கடந்த வாரம் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 10 லட்சம் ரூபாய் செலவில் தெர்மாகோல் கொண்டு மூடப்பட்டது. ஆனால் அதை மூடிய சில நிமிடங்களில் தெர்மாகோல் எல்லாம் பறந்தன. இத்திட்டத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு,

விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்ற பிறகும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது அவசியமற்றது. தமிழக அரசின் மீது பழி சுமத்தவே முழு அடைப்பு நடத்தப்படுகிறது என்றார்.

மேலும் வைகை அணை தெர்மாகோல் திட்டம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது என்றும் அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க