• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை

July 26, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல மன்ற கூட்டம் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில்,

‘‘பீளமேடு எல்லை தோட்டம் ரோடு, பிகேடி நகர், விகே ரோடு போன்ற பகுதிகளில் தெரு நாய் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் பிகேடி நகரில் இரண்டு குழந்தைகளை கடித்து விட்டது. இதுகுறித்து புகார் சொல்லியும் கருத்தடை பணிக்காக நாய் பிடிக்கும் வாகனம் வருவதாக சொல்லி இதுவரை வரவில்லை.

எல்லைத் தோட்டம் ரோடு, முருகன் நகர் பகுதிகளில் நாய் வாகனம் வந்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை இப்பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தக்கூடிய பயனீர் மில் ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது. உடனடியாக அதனை சீர் செய்து தர வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க