• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு புது வீடு வாங்கி தந்த தீயனைப்பு துறையினர்

April 27, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு தீயணைப்பு வீரர்கள் புதிய வீடு வாங்கி தந்துள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் லாடர் ஹில் நகரில் நிகோலா என்பவர் தனது கணவர் டைலருடன் வசித்து வருகிறார். நிகோலா ஒரு நிறைமாத கர்ப்பிணி. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் நிகோலாவின் வீடு முழுவதும் தீயில் அழிந்துவிட்டது. வளைகாப்பு நிகழ்ச்சியின்போது நிகோலாவுக்கு கிடைத்த அனைத்து பரிசு பொருட்களும் அந்த தீயில் கருகி விட்டது.

தீ விபத்து செய்தியை அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.நிகோலாவின் நிலையை அறிந்த அவர்கள், அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணி, அவருக்கு ஒரு புதிய வீட்டையும், வளைகாப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இது குறித்து தீயணைப்பு வீரர் ஜெர்ரி கொன்சாலெஸ் என்பவர் கூறுகையில்,

“நாங்கள் தீயில் அழிந்துவிட்ட வீட்டையும், வீட்டிலிருந்த வளைகாப்பு பரிசு பொருட்களையும் பார்த்தோம். அனைத்தையும் இழந்த அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். உடனே நன்கொடைகளை வாங்கி, தேவையான பொருட்கள், பரிசு பொருட்கள், மற்றும் நெக்லஸ் ஒன்றையும் வாங்கினோம். இறுதியாக, ஒரு வீட்டை வாங்கி அதை நிகோலாவிற்கு பரிசாக தந்தோம்” என்றார்.

“கடவுள் அற்புதமானவர். நான் நினைத்தற்கும் மேலான பொருட்களை இந்த தீயணைப்பு வீரர்கள் மூலம் எனக்கு தந்துள்ளார். என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது” என்றார் நிகோலா.

மேலும் படிக்க