• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீயின் மீது நடனமாட முயன்ற 7 வயது சிறுமி மரணம்

December 1, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவில் தொலைக்காட்சியில் வரும் சீரியல் பார்த்து, தீயின் மீது நடனமாட முயன்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் ஹரிஹரா பகுதியை சேர்ந்தவள் பிராத்தனா(7). அவள் கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நந்தினி’ சீரியலில் நடிக்கும் ஒரு கதாபாத்திரம் தீயின் மீது நடனம் ஆடும் காட்சியை பார்த்துள்ளார்.

இந்நிலையில்,கடந்த நவம்பர் 11ம் தேதி, தன்னுடைய பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், புடவை அணிந்துக்கொண்டு, வீட்டிலிருந்த புத்தகங்களில் உள்ள காகிதங்களை கிழித்து தன்னை சுற்றி பரப்பி,காகிதங்கள் மேல் தீ வைத்து அந்த சீரியலில் தீயின் மீது நடனம் ஆடுவது போல் செய்துள்ளாள்.சிறிது நேரத்தில் சிறுமியின் மீது தீ பற்றி எரிந்தது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள், சிறுமியின் வீட்டிற்கு வந்து, கடுமையான தீக்காயங்களுடன் இருந்த சிறுமியை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் தரப்பட்டது.ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, தொலைக்காட்சி தொடர்களில் பேய், மற்றும் சூனியம் தொடர்பான கன்னட டிவி தொடர்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க