• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா

January 11, 2019 தண்டோரா குழு

மத்திய அரசு தீயணைப்புத்துறை இயக்குனர் பதவி வழங்கிய நிலையில் அதனை ஏற்க மறுத்து அலோக் வர்மா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டதால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அலோக் வர்மாவை மீண்டும் பணிக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. மேலும் அவரை பணியமர்த்துவது குறித்து சிறப்பு நியமன குழு தீர்மானித்து கொள்ளலாம் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட மூவர் குழு நேற்று இது பற்றி விவாதித்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. ஊழல் மற்றும் பணியில் அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3 பேர் கொண்ட இந்த தேர்வுக்குழுவில் மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அலோக் வர்மாவின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கிடையில், சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை அவர் இயக்குனர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைபோல் அதேநேரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மா பொது தீ தடுப்பு பணிகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், மத்திய அரசு தீயணைப்புத்துறை இயக்குனர் பதவி வழங்கிய நிலையில் அதனை ஏற்க மறுத்து அலோக் வர்மா பதவியை ராஜினாமா செய்துள்ளார். அலோக் வர்மா வருகிற 31–ந்தேதி பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க