• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 தி.மு.க எம்.எல்.ஏ.,க்களுக்கு மன்னிப்பு வழங்கினார் சபாநாயகர்

June 23, 2017 தண்டோரா குழு

சட்டபேரவையில் அமளியில் ஈடுபட்டது தொடர்பான உரிமை மீறல் பிரச்னையில், 7 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யாமல், எச்சரிக்கை விடுத்து, சபாநாயகர் மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவை விதிகளை மீறியதாகவும், அவைக்கு குந்தகம் விளைவித்ததாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திமுகவினர் மீது சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து இந்த புகாரை உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார் சபாநாயகர்.இது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் செல்வம், மஸ்தான், சுரேஷ் ராஜன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், முருகன் மற்றும் அம்பேத்குமார் ஆகிய 7 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்ப‌டையில், திமுக உறுப்பினர்கள் மீது நட‌வடிக்கை எடுப்பது குறித்து நேற்று நடைபெற்ற அவை உரிமைக் குழுவில் விவாதிக்கப்பட்டு சபாநாயகருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையை பரிசீலித்த சபாநாயகர் 7 எம்.எல்.ஏ க்கள் மன்னிப்பு கூறியதாகவும், 7 எம்.எல்.ஏ க்களில் 6 பேர் அவைக்கு புதியவர்கள் என்பதால் எச்சரிக்கை செய்து சஸ்பெண்டை ரத்து செய்வதாக கூறினார்.

மேலும் படிக்க